என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல் கொள்முதல் நிலையம்"
- நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
- உழவர்களிடம் கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை ஒரே ஒரு கொள்முதல் நிலையம் மட்டும் தான் திறக்கப்பட்டிருக்கிறது. பிற காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலும் குவித்து வைத்துக்கொண்டு எப்போது அவற்றை விற்க முடியுமோ? என்ற ஏக்கத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் உழவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் முழுவதையும் அதே நாளில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும். உழவர்களிடம் கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் நெல் களம் அமைக்கும் கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- அதிகாரிகள் கட்டிடத்தை முறையாக ஆய்வு செய்து தரமான கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் சுந்தரபாண்டியபுரம் பகுதி விவசாயிகள் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையான நெல் களம் அமைக்கும் பணியானது ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் நெல் களம் அமைக்கும் கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கட்டிடத்திற்கான தூண்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. அதில் 2 துண்டுகளாக ஒன்றோடு ஒன்று சரியாக இணைக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் கட்டிடம் தரமாக இருக்காது என்றும், சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் அபாயம் எழுந்துள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் கட்டிடத்தை முறையாக ஆய்வு செய்து தரமான கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது
- நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. முத்துராஜா திறந்து வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு கீழத்தெரு ஊராட்சியில் உள்ள குரும்பிவயலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கரு கீழத்தெரு ஊராட்சி மன்ற தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன், அரசு ஒப்பந்ததாரரும் மாவட்ட இலக்கிய அணியின் துணைச் செயலாளருமான கருக்காகுறிச்சி பரிமளம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக அரசுக்கும், எம்.எல்.ஏ. முத்துராஜாவிற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் அப்பகுதி கிராமமக்கள் எம்.எல்.ஏ.விடம் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. முத்துராஜா வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
- கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
- அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் மஞ்சம்பட்டியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதி முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகேசன், ராஜேந்திரன், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, துணைத் தலைவர் மலர்விழி சிவானந்தம், ஊராட்சி செயலர் இளவரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 3 நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
- முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் அழியா நிலையில் 37 மெ.டன், துளையனூரில் 8 ஆயிரம் மெ.டன் பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன், கான்கிரீட் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொருட்டு கான்கிரீட் தளம், மேற்கூரை கட்ட தமிழக அரசு ரூ.47.11 நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 40 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் அறந்தாங்கி தாலுகா, அழியா நிலையிலும், துளையனூரில் 12.50 மெ.டன் என மொத்தமாக 52.5 மெ.டன் பாதுகாக்கப்படும் வகையில் 37 மேற்கூரையுடன் கூடிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் அழியா நிலையில் 37 மெ.டன், துளையனூரில் 8 ஆயிரம் மெ.டன் பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன், கான்கிரீட் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் அழியா நிலையில் 3 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட 2 கிடங்குகளையும், துளையனூரில் 4 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட 3 கிடங்குகளையும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும் புதுக்கோட்டை மாவட்டம், சிறுமருதூர், பொன்னன்விடுதி, நெற்குப்பை ஆகிய இடங்களில் தலா ரூ.62.50 இலட்சம் வீதம் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 3 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இதற்காக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற் நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் எம்.சீதாராமன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- வடக்கலூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
- விவசாயிகள் தங்கள் பகுதியிலேயே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் நெல் சாகுபடியே அதிகமாக செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் பகுதியிலேயே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதையடுத்து தமிழக அரசின் சார்பில் வடக்கலூர் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் செல்லம்மாள் மாயவேல், துணைத் தலைவர் கணேசன், முன்னாள் தலைவர் பிச்சமுத்து, நெல் கொள்முதல் கண்காணிப்பாளர் சையது முஸ்தபா, பட்டியல் எழுத்தர் அழகுதுரை, அகரம் காமராஜ், பழைய அரசமங்கலம் குருசாமி, கத்தாழை மேடு செல்வகுமார் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு தொகுதியைச் சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றியம், சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை, செய்யாறு ஒன்றியம், காழியூர் ஆகிய 4 கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயி களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் ஜெ.சி.கே. சீனிவாசன், தினகரன், ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளின் பயன்பெறும் வகையில் 4 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் வெம்பாக்கம், அப்துல்லாபுரம், தூசி ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கோடை வெயில் தாக்கத்தை போக்கும் வகையில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்து கிராம மக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, கிர்னி பழம், கீரைக்காய் உள்ளிட்ட வைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பார்த்திபன், சுந்தரேசன், கருணாநிதி, தி.மு.க. நிர்வாகிகள் சிட்டிபாபு, பிரகாசம், சங்கர், பெரு மாள், ராதாகிருஷ்ணன், தயாளன், அம்பிகாபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நெமிலி பெரப்பேரி விவசாயிகள் வலியுறுத்தல்
- அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் அவதி
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், பெரப்பேரி கிராமத்தில் விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் ஏரி, குளம், குட்டை ஆகியவை முழுமையாக நிரம்பியது. இதனால் நவரை பருவகால நெற்பயிரை அனைவரும் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து விளைவித்த நெல்லை விற்க நெடுந்தூரம் கொண்டு செல்லவேண்டியுள்ளதால் தங்கள் பகுதியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இதுவரை நெல்கொள் முதல் நிலையம் தொடங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல்லை விற்கமுடியாமல் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெமிலி பஸ் நிலையத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த வேடல், அரக்கோணம் பகுதியில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேடல் செம்பேடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், குமார், சுந்தரமூர்த்தி, கருணாநிதி, பிரசாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்துகொண்டு 2 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சவுந்தர், பொதுக்குழு தலைவர் கிருஷ்ணன், அவைத்த லைவர் சக்கரவர்த்தி, ஒன்றிய துணைச் செயலா ளர்கள் எஸ்.இ.போர் பாபு, பூசனம் கன்னியப்பன், பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் எம்.மூர்த்தி, குப்புசாமி, ராமலிங்கம், சுற்றுச்சூழல் ஒன்றிய துணை அமைப்பாளர் ஐயப்பன், தொழில்நுட்ப பிரிவு சந்துரு, ராகுல், தனசேகர், கிளைக் கழக செயலாளர்கள் மிலிட்டரி சுப்பிரமணி, ஏழுமலை, ராஜகோபால், சேகர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.
தாராபுரம் :
தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.
இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.
- விவசாயிகள் குற்றச்சாட்டு
- 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் விஜயகீர்த்தி தலைமையில் 15 கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி அண்ணா சிலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய பஸ் நிலையம், ஆற்றுபாலம் வழியாக சென்று மா மரம் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது.
கூட்டுறவு சங்கத்தின் கடன் தவனை நீட்டிக்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையம் இல்லாத ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரத்தை வேளாண்மை கூட்டுறவு மூலம் விற்பனை செய்ய வேண்டும் . கரும்பு டன்னுக்கு 6000 ரூபாய் ஆக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தினர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் 1 கிலோவிற்கு 1 ரூபாய் கட்டாயம் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குகின்றனர். இதனை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள் மாவட்ட பொருளாளர் வேலு, ஆரணி வட்டார தலைவர் வேலப்பாடி கோபி, நெசல் கிளைத் தலைவர் மணிவண்ணன், கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கிளைச் செயலாளர்கள் வெற்றி வேந்தன் வெங்கடேசன் சக்திவேல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
- அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கபட உள்ளது
- வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால்,விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கரீப் கேஎம்எஸ் 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 4 ஆம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் மஞ்சமேடு, தூத்தூர், கள்ளுர், முடிகொண்டான், திருவெங்கனூர், திருமானூர், கரைவெட்டி, குந்தபுரம் மற்றும் செந்துறை வட்டத்தில், படைவெட்டிகுடிகாடு, ஆகிய 9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்